தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வடகிழக்கு பருவ மழையால் தமிழ்நாட்டில் 2,139 ஏரிகள் நிரம்பின: நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல்

சென்னை: வட கிழக்கு பருவமழையால் தமிழகத்தில் 2,139 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னைக்கு நீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஆகிய 3 முக்கிய நீர்த்தேக்கங்களிலிருந்து நீர்வரத்து அதிகரிப்பை தொடர்ந்து உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அதேபோல, போரூர் ஏரி, கீழ்கட்டளை ஏரி, நாராயணபுரம் ஆகிய ஏரிகளிலிருந்து உபரிநீர் திறந்துவிடப்பட்டு உள்ளது. பருவமழை தீவிரமடைந்துள்ளதால் 2139 ஏரிகள் நிரம்பி வழிகின்றன. மாநிலம் முழுவதும் உள்ள 90 அணைகள், நீர்த்தேக்கங்களில் 89 சதவீதம் நீர் இருப்பு உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

ஏரிகள் 100 சதவீதம் நிரம்பியதில் முதலிடத்தில் கன்னியாகுமரியில் 390 ஏரிகள், இரண்டாவது இடத்தில் திருவண்ணாமலையில் 255 ஏரிகள், மதுரையில் 241 ஏரிகள், ராணிப்பேட்டையில் 231 ஏரிகள் நிரம்பியுள்ளன. அதேபோல் 2,195 ஏரிகளில் 76 முதல் 99 சதவீதமும், 2,395 ஏரிகளில் 51 முதல் 75 சதவீதமும், 3,040 ஏரிகளில் 26 முதல் 50 சதவீதமும், 3,877 ஏரிகளில் ஒன்று முதல் 25 சதவீதமும் நீர் நிரம்பியுள்ளன. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் 198 ஏரிகள் முழு கொள்ளளவான 100 சதவீதம் நீர் நிரம்பியுள்ளது.

சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய 4 மண்டலங்களில் மட்டும் மொத்தம் 90 அணைகள், நீர்த்தேக்கங்கள் உள்ளன. இவற்றின் மொத்த கொள்ளளவு 224.343 மில்லியன் கனஅடி. நேற்றைய நிலவரப்படி 198.436 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. அதாவது 88.45 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கிய ஒரு வாரத்தில் தமிழகத்தில் 25 சதவீத நிலப்பரப்பில் மட்டுமே மழை பெய்துள்ளது. மேலும் எதிர்வரும் நாட்களில் அதிகளவில் மழை பெய்யும் என்பதால் ஏரிகளின் நீர் இருப்பு மேலும் அதிகரிக்கக்கூடும். கடந்தாண்டை காட்டிலும் இந்தாண்டு அதிகளவில் அணைகள் மற்றும் ஏரிகள் நிரம்பியுள்ளன. அவ்வப்போது உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. எனவே கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மாவட்டம் மொத்த

ஏரிகள் 100% 50%

சென்னை 28 3 23

செங்கல்பட்டு 564 50 399

காஞ்சிபுரம் 381 62 316

திருவள்ளூர் 578 83 428

* நிரம்பிய அணைகள்

மேட்டூர், சூளகிரி சின்னாறு, ஆண்டியப்பனூர் ஓடை, மோர்தனா, ராஜாத்தோப்புகனார், குண்டாறு, சண்முகாநதி, சோத்துப்பாறை, சாஸ்தா கோவில், தமிழ்நாடு சோலையாறு, ஆழியாறு, வர்தமாநதி, குண்டேரிபள்ளம், பெரும்பள்ளம், பரம்பிக்குளம், துணக்கடவு மற்றும் பெருவாரிபள்ளம் ஆகிய 16 அணைகளில் 95 சதவீதத்திற்கும் அதிகமான நீர் இருப்பு உள்ளது.

Advertisement