தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இதுவரை இயல்பைவிட 7% குறைவாக பெய்துள்ளது : வானிலை ஆய்வு மையம் தகவல்
Advertisement
சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இதுவரை இயல்பைவிட 7% குறைவாக பெய்துள்ளது என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இயல்பான நிலையில் 305.8 மி.மீ. மழை பொழியும் நிலையில் இன்றுவரை 284.7 மி.மீ. மழை பொழிந்துள்ளது. சென்னையில் வடகிழக்கு பருவமழை இதுவரை இயல்பைவிட 24 குறைவாக பெய்துள்ளது. இயல்பான நிலையில் 555.3 மி.மீ. மழை பொழியும் நிலையில் & இன்றுவரை 422.7 மி.மீ. மழை பொழிந்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் மாவட்டங்களில் பகல் 1 மணிக்குள் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
Advertisement