வடகிழக்கு பருவமழை இன்று தொடங்குகிறது
சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகள், கேரளா-மாஹே, தெற்கு உள் கர்நாடகா, ராயலசீமா, தெற்கு கடலோர ஆந்திரப் பிரதேசம் பகுதிகளில் வட கிழக்கு பருவமழை இன்று முதல் பெய்யத் தொடங்கும். தேனி, தென்காசி, திருநெல்வேலி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூரில் ஓரிரு இடங்களிலும் இன்று கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதால் மேற்கண்ட பகுதிகளில் ஒருசில இடங்களுக்கு ரெட் அலர்ட் மற்றும் பிற மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement