அக்.16-ல் வடகிழக்கு பருவமழை தொடங்கும்: தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் அமுதா பேட்டி
Advertisement
சென்னை: அக்டோபர் 16-18 தேதிகளில் தென்மேற்கு பருவமழை விலகுவதற்கான வாய்ப்பு உள்ளது என தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் அமுதா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; அக்டோபர் 16-18 தேதிகளில் தென்மேற்கு பருவமழை விலகுவதற்கான வாய்ப்பு உள்ளது. வடமாவட்டங்களில் இயல்பை விட அதிக அளவு வடபருவ மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வடகிழக்கு பருவமழை காரைக்கால் பகுதியில் தொடங்கும் என எதிர்பார்க்க படுகிறது.
தென்மாவட்டங்களில் குறைந்த அளவே மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் 44 செ.மீ. மழை பதிவாவது வழக்கம். நடப்பாண்டு 50 செ.மீ அளவுக்கு வடகிழக்கு பருவமழை இயல்பை காட்டிலும் அதிகமாக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
Advertisement