தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு ரூ.14.57 கோடியில் 15 வாகன சுரங்கப்பாதைகள் சீரமைப்பு:  17 இடங்களில் தானியங்கி தடுப்பு 

சென்னை: வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, சென்னை மாநகராட்சியில் 15 வாகன சுரங்கப்பாதைகளில் ரூ.14.57 கோடி மதிப்பீட்டில் மேம்பாட்டுப் பணிகள் நடந்து வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Advertisement

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை:

சென்னை மாநகராட்சியில் மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் வாகனங்களின் பெருக்கத்தால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைத்திடும் வகையிலும், பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையிலும் பாலங்கள், மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள், நடை மேம்பாலங்கள் மற்றும் ஆகாய நடைபாதைகள் உள்ளிட்ட பாலங்கள் புதிதாக கட்டப்பட்டு வருகின்றன. சென்னை மாநகராட்சியின் சார்பில் 152 இடங்களில் கால்வாய்/ ஆறுகளின் குறுக்கே பாலங்கள், 19 பெட்டக வடிவப் பாலங்கள், 23 சிறு பாலங்கள், 14 ரயில்வே மேம்பாலங்கள், 19 ரயில்வே சுரங்கப்பாதைகள், 5 பாதசாரிகள் சுரங்கப்பாதைகள், 2 தரைப்பாலங்கள், 39 நடைபாலங்கள், 14 மேம்பாலங்கள், 5 நடைமேம்பாலங்கள் மற்றும் ஒரு ஆகாய நடைபாதை ஆக மொத்தம் 293 பாலங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் பராமரிப்பில் உள்ள வாகனச் சுரங்கப் பாதைகள்:

வாகனச் சுரங்கப்பாதைகளைப் பொறுத்தவரை, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மாநகராட்சியின் பராமரிப்பில் 19 வாகனச் சுரங்கப்பாதைகளும், நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் 5 வாகனச் சுரங்கப்பாதைகளும் பராமரிக்கப்பட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்படும் வாகனச் சுரங்கப்பாதைகள்:

திருவொற்றியூர் மண்டலம், வார்டு-5, மாணிக்கம் நகரில் வரையறுக்கப்பட்ட வாகனச் சுரங்கப்பாதை, ராயபுரம் மண்டலம், வார்டு-60ல் ஆர்.பி.ஐ. சுரங்கப்பாதை, வார்டு-61ல் கெங்கு ரெட்டி சுரங்கப்பாதை, வார்டு-52ல் எம்.சி. சாலை-ஸ்டான்லி சுரங்கப்பாதை, வார்டு-53ல் சி.பி.சாலை மற்றும் போஜராஜன் நகர் சுரங்கப்பாதை, திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-71ல் கணேசபுரம் மற்றும் பெரம்பூர் சுரங்கப்பாதைகள், அம்பத்தூர் மண்டலம், வார்டு-84ல் கொரட்டூர் சுரங்கப்பாதை, அண்ணாநகர் மண்டலம், வார்டு-94ல் வில்லிவாக்கம் சுரங்கப்பாதை, வார்டு-108ல் ஹாரிங்டன் சுரங்கப்பாதை, தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-109ல் நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதை, கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-132ல் ரங்கராஜபுரம் இருசக்கர வாகனச் சுரங்கப்பாதை, வார்டு-133ல் துரைசாமி சுரங்கப்பாதை, வார்டு-134ல் மேட்லி சுரங்கப்பாதை, வார்டு-142ல் ஜோன்ஸ் சாலையில் பவளவண்ணன் சுரங்கப்பாதை மற்றும் பஜார் சாலை சுரங்கப்பாதைகள், ஆலந்தூர் மண்டலம், வார்டு-162ல் பழவந்தாங்கல் சுரங்கப்பாதை, அடையாறு மண்டலம், வார்டு-171ல் அரங்கநாதன் சுரங்கப்பாதை என மொத்தம் 19 சுரங்கப்பாதைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் சுரங்கப்பாதைகள்:

திருவொற்றியூர் மண்டலம், வார்டு-1ல் கத்திவாக்கம் நெடுஞ்சாலை ரயில்வே சுரங்கப்பாதை, தண்டையார்பேட்டை மண்டலம், வார்டு-46ல் வியாசர்பாடி ரயில்வே சுரங்கப்பாதை, ஆலந்தூர் மண்டலம், வார்டு-161ல் மவுண்ட் சுரங்கப்பாதை, வார்டு-162ல் தில்லை கங்கா நகர் சுரங்கப்பாதை, வார்டு-166ல் மீனம்பாக்கம் சுரங்கப்பாதை ஆகிய 5 சுரங்கப்பாதைகள் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

மேயர் நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, வாகனச் சுரங்கப் பாதைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்புப் பணிகள்:

இந்நிலையில், மேயர் நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, சென்னை மாநகராட்சியின் பராமரிப்பில் உள்ள ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை, கெங்கு ரெட்டி சுரங்கப்பாதை, மாணிக்கம் நகர் சுரங்கப்பாதை, பெரம்பூர் சுரங்கப்பாதை, கொரட்டூர் சுரங்கப்பாதை, வில்லிவாக்கம் சுரங்கப்பாதை, ஹாரிங்டன் சுரங்கப்பாதை, நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதை, துரைசாமி சுரங்கப்பாதை, ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை, ஜோன்ஸ் சாலை சுரங்கப்பாதை, பஜார் சாலை சுரங்கப்பாதை, பழவந்தாங்கல் சுரங்கப்பாதை, அரங்கநாதன் சுரங்கப்பாதை ஆகிய 15 வாகன சுரங்கப்பாதைகளில் ரூ.14.57 கோடி மதிப்பீட்டில் சுவர்களில் நீர் கசியாவண்ணம் பாலியூரித்தின் செலுத்தும் பணி உள்ளிட்ட சீரமைப்புப் பணிகளும், புதிய டீசல் மோட்டார்கள், மின்மோட்டார்கள், மின்னாக்கி ஆகியன உரிய கட்டமைப்புகளுடன் கூடிய மின் பணிகளும் மற்றும் சுரங்கப்பாதைகளில் வர்ணங்கள் பூசப்பட்டு வண்ணமிகு வரைபடங்கள் வரைந்து மின் விளக்குகளால் அழகுப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

வாகனச் சுரங்கப் பாதைகளில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி தடுப்புகள்:

மேலும், சென்னை மாநகராட்சியின் வாகன சுரங்கப்பாதைகளில் ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை, துரைசாமி சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதை, எம்.சி.சாலை சுரங்கப்பாதை, ஜோன்ஸ் சாலையில் பவளவண்ணன் சுரங்கப்பாதை, பஜார் சாலை சுரங்கப்பாதை, வில்லிவாக்கம் சுரங்கப்பாதை, கெங்குரெட்டி சுரங்கப்பாதை, மாணிக்கம் சுரங்கப்பாதை, ஆர்.பி.ஐ சுரங்கப்பாதை, வியாசர்பாடி சுரங்கப்பாதை, பெரம்பூர் சுரங்கப்பாதை, அரங்கநாதன் சுரங்கப்பாதை, நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதை, ஹாரிங்டன் சுரங்கப்பாதை, பழவந்தாங்கல் சுரங்கப்பாதை, ஸ்டான்லி நகர் சுரங்கப்பாதை ஆகிய 17 சுரங்கப்பாதைகளில் மழைக்காலங்களில் அதிக மழைநீர் தேங்கும் நேரங்களில் போக்குவரத்தை தன்னியல்பாக தடைசெய்திடும் வகையில் உரிய அறிவிப்புகளுடன் செயல்படும் தானியங்கி தடுப்புகள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த சுரங்கப்பாதைகளில் மழைநீர் குறையும் போது தானியங்கி தடுப்புகள் தன்னியல்பான அறிவிப்புகளுடன் செயல்பட்டு போக்குவரத்திற்கு வழிவகுத்திடும். இதனை பெருநகர சென்னை மாநகராட்சியின் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் வாயிலாக கண்காணித்திடும் பணிகளும் மேற்கொள்ளப்படும்.

இதன் வாயிலாக இந்த வாகன சுரங்கப்பாதைகளில் சீரான போக்குவரத்து உறுதிசெய்யப்பட்டு மக்களுக்குப் பெரிதும் பயனுள்ளதாக அமைந்திடும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Related News