தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வடகிழக்கு பருவமழை நெருங்கிய நிலையில் சாலையோர கால்வாய்களை தூர்வாரும் பணி துவங்கியது

ஊட்டி : வடகிழக்கு பருவமழை நெருங்கிய நிலையில் நீலகிரி மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் சாலையோர கால்வாய்கள், சிறு பாலங்களில் தூர்வாரும் பணிகள் மாவட்டம் முழுவதும் துவங்கியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் துவங்கி இருமாதங்கள் தென்மேற்கு பருவமழை பெய்யும். இச்சமயங்களில் மண் சரிவுகள் மற்றும் மரங்கள் விழுந்து பாதிப்புகள் ஏற்படும்.

Advertisement

அதேபோல், சாலையோரங்களில் உள்ள தடுப்பு சுவர்கள் இடிந்து விழுவது மற்றும் மண்அரிப்பு போன்றவைகள் ஏற்பட்டு சாலைகள் பாதிக்கும். இதனை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து சாலையோரங்களில் உள்ள சிறுபாலங்கள் மற்றும் மழைநீர் கால்வாய்களில் தூர் வாரப்படும்.

இதன் மூலம் கன மழை பெய்தாலும், மழை நீர் கால்வாய்கள் மற்றும் சிறுபாங்கள் மூலம் ஓடிவிடும். சாலை பாதிக்காது. அதேபோல், அக்கடோபர் மாதம் துவங்கி இரு மாதங்கள் வடகிழக்கு பருவமழை பெய்யும்.

இச்சமயங்களில் கனமழை பெய்யும் நிலையில், பல்வேறு பகுதிகளிலும் பெரிய அளவிலான நிலச்சரிவுகள், சாலை துண்டிப்பு ஏற்படுதல் மற்றும் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்படும். இதனால், ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை துவங்கும் முன் அனைத்து பகுதிகளிலும் உள்ள மழைநீர் கால்வாய்கள், சிறுபாலங்கள் தூர்வாரப்பட்டு, மழைநீர் தங்கு தடையின்றி ஓட நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை மேற்கொள்வது வாடிக்கை.

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை துவங்கும் முன் அனைத்து பகுதிகளிலும் மழைநீர் கால்வாய்கள், கழிவுநீர் கால்வாய்கள் ஆகியவைகளை தூர்வார வேண்டும் என தமிழகஅரசு நெடுஞ்சாலைத்துறை மற்றும் உள்ளாட்சித்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் உள்ள நெடுஞ்சாலைகள், கிராமப்புற சாலையோரங்களில் இருந்த மழைநீர் கால்வாய்களில் தூர்வாரும் பணிகள் துவக்கப்பட்டு நடந்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகள், குறிப்பாக, ஊட்டி- கோத்தகிரி- மேட்டுப்பாளையம் சாலை மற்றும் கிராமப்புறங்களுக்கு செல்லும் சாலைகள் அனைத்திலும் இப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, குன்னூர், கூடலூர் மற்றும் கோத்தகிரி ஆகிய நான்கு உட்கோட்டங்களில் உள்ள சாலையோர கால்வாய்கள், சிறு பாலங்கள், பாலங்கள், குழாய் பாலங்கள் ஆகியவை தூர் வாரப்பட்டுள்ளது. தொடர்ந்து, தூர்வாரும் பணிகள் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கோட்ட பொறியாளர் குழந்தைராஜ் கூறுகையில், நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து பகுதிகளிலும் உள்ள சாலையோரங்களில் உள்ள மழைநீர் கால்வாய்கள் தூர்வாரும் பணிகள் துவக்கப்பட்டு நடந்து வருகிறது, என்றார்.

Advertisement

Related News