வடகிழக்கு பருவமழையால் நெற்கதிர்கள் சாய்ந்து சேதம்
ஈரோடு : ஈரோட்டில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக, ஈரோடு காலிங்கராயன் பாசனப்பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் சாய்ந்து காணப்படுவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். பவானிசாகர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், ஈரோடு காலிங்கராயன் பாசனப் பகுதியில் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
Advertisement
குறிப்பாக, ஈரோடு அடுத்த சுண்ணாம்பு ஓடை, பி.பெ.அக்ரஹாரம், வைரபாளையம், கருங்கல்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக, அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் ஆங்காங்கே சாய்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
Advertisement