வடஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 18 பேர் உயிரிழப்பு!
அல்ஜீரியா: வடஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். பேருந்தில் பயணித்த 18 பேர் உயிரிழந்த நிலையில் படுகாயமடைந்த 9 பேருக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வட ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவில் தலைநகர் அல்ஜியர்ஸில் பயணிகள் பேருந்து ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் பேருந்தில் பயணித்தவர்களில் 18 பேர் பலியாகினர். மேலும், காயமடைந்த 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களும் மோசமான நிலையில் இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. பேருந்தை அதிவேகமாக இயக்கியதால் நிலைதடுமாறி ஆற்றில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.