வடசென்னை அனல் மின்நிலையத்தில் 1020 மெகாவாட் மின்உற்பத்தி பாதிப்பு!!
சென்னை: வடசென்னை அனல் மின்நிலையத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக 1020 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 2வது நிலையின் 1வது அலகில் தொழில்நுட்பக் கோளாறால் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 1வது நிலையின் 2வது அலகில் ஆண்டு பராமரிப்பு பணிகள் காரணமாக 210 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 1வது நிலையின் 3வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக 210 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement