வேலைக்கு செல்லாத தாய்மார்களுக்கு ரூ.40,000 உதவித்தொகை வழங்கி அசத்திய சிக்கிம் முதலமைச்சர்..!!
சிக்கிம்: வேலைக்கு செல்லாத தாய்மார்களுக்கு ஆண்டுக்கு ரூ.40,000 உதவித்தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டு அதற்கான முதல் தவணையை சிக்கிம் முதலமைச்சர் பிரேம் சிங் தமங் வழங்கி உள்ளார். சிக்கிம் முதலமைச்சர் பிரேம் சிங் தமங் அரசு நடத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக வேளைக்கு செல்லாத தாய்மார்களுக்கு உதவி தொகையை வழங்கினார். அந்த வகையில் 32 ஆயிரம் தாய்மார்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள காசோலைகளை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.வேலை இல்லாத தாய்மார்களான அனைத்து பெண்களுக்கும் ஆமா சக்திகரன் யோஜனாவின் கீழ் ஆண்டுக்கு ரூ.40 ஆயிரம் வழங்கப்படும்.
தாய்மார்களின் தியாகங்கள், வலிமை மற்றும் பங்களிப்புக்காக அவர்களை கவுரவிப்பதற்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த கொண்டாட்டம் ரங்ப்பூ விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. சிக்கிம் முழுவதிலும் உள்ள தாய்மார்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் இந்த நிகழ்வைக்கான கூடி இருந்தனர். புதிதாக தொடங்கப்பட்ட இந்த முயற்சியின் கீழ் வேளைக்கு செல்லாத அனைத்து பெண்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் 40 ஆயிரம் மானியம் வழங்கப்படும். இந்த தொகை 2 கட்டங்களாக வழங்கப்படும். முதல் கட்டத்தில் ரூ.20 ஆயிரம், 2ம் கட்டத்தில் ரூ.20 ஆயிரமும் நிதி உதவி வழங்கப்படும்.
இந்த திட்டத்திற்காக அரசாங்கம் மொத்தம் 128 கோடி செலவிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் பேசிய முதலமைச்சர் சிக்கிமின் சமூக மற்றும் அரசியல் சூழ்நிலைகளில் கடினமான காலங்களில் தாய்மார்கள் எப்போதும் முக்கிய பங்கு வகுத்துள்ளனர். புரட்சிகர தோழர்களுடன் தாய்மார்கள் தோளோடு தோள் நின்று அதே போராட்டங்களையும், தியாகங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளனர். சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சியின் பயணம் மாநிலம் முழுவதும் உள்ள தாய்மார்களின் தைரியத்தையும், உறுதியையும் பிரதிபலித்தது என்று அவர் குறிப்பிட்டார்.
அதே போல் தான் சிறையில் இருந்த போது பெரும்பாலும் தாய்மார்கள் தன்னை பார்க்க வந்தார்கள். சில சமயங்களில் தன்னை திட்டவும், சில சமயங்களில் அறிவுரை வழங்கவும் அதே போல் தொடர்ந்து போராட துணிச்சலை அளிக்கவும் அவர்கள் வந்தனர். அவர்களின் வார்த்தைகள் என்னும் புரட்சிகர உணர்வை உயிர்ப்புடன் வைத்திருந்தன என்று முதலமைச்சர் குறிப்பிட்டார். ஊழல் வழக்கில் தண்டனை பெட்ரா பின்னர் பிரேம் சிங் தமங் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதன் 8வது ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில் சிக்கிம் அரசு இந்த நாளை அம்மாசமன் துவஸாக கொண்டாடியது என்பதும் குறிப்பிடத்தக்கது.