என்எம்எம்எஸ் தேர்ச்சி விவரங்கள் துரிதமாக பதிவுசெய்ய வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை
என்எம்எம்எஸ் தேர்வில் (ஒன்றிய அரசின் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை) தேர்ச்சி பெற்ற மாணவர்களின் புதிய படிவங்கள் மற்றும் ஏற்கனவே உதவித்தொகை பெற்று வருபவர்களின் புதுப்பித்தல் விண்ணப்பங்களை முறையாக பதிவு செய்ய வேண்டும் என்று பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த பணிகளை ஜூலை 15ம் தேதிக்குள் முடித்திடவும் உத்தரவிடப்பட்டது. ஆனால், இதில் 40 சதவீது பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளது.
இந்த பணிகளை முடிக்காவிட்டால் சம்பந்தப்பட்ட பிரிவு எழுத்தர், கண்காணிப்பாளர் முழு பொறுப்பு ஏற்க வேண்டும். எனவே, என்எம்எம்எஸ் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் புதிய மற்றும் புதுப்பித்தல் விண்ணப்பங்களை துரிதமாக பதிவுசெய்ய வேண்டும். இல்லையெனில், சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் பணிபுரியும் பிரிவு எழுத்தர்கள் இயக்குநரகத்துக்கு நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும். தொடர்ந்து இந்த பணிகளை முடித்த பின்னரே அவர்கள் இங்கிருந்து விடுவிக்கப்படுவார்கள்.