மதுரை : நித்யானந்தாவின் ஆசிரமத்தில் இருந்து பக்தர்களை வெளியேற்ற விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீட்டிப்பு செய்யப்பட்டது. நித்யானந்தா ஆசிரமத்தின் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மருத்துவரின் இடத்தில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்தில் இருந்து பக்தர்களை வெளியேற்ற ஆர்.டி.ஓ. ஆணையிட்டார். வருவாய் கோட்டாட்சியரின் உத்தரவை எதிர்த்து நித்யானந்தா ஆசிரமம் சார்பில் ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்தது.