மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், திருப்பதியில் சாமி தரிசனம்!!
திருப்பதி : மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று (செப்டம்பர் 12, 2025) அதிகாலை தனது குடும்ப உறுப்பினர்கள் சிலருடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.அதிகாலை நடைபெற்ற அபிஷேக சேவையில் பங்கேற்று சிறப்பு வழிபாடு நடத்திய அவருக்கு, தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர். வேத பண்டிதர்கள் வேத ஆசி வழங்கினர். நேற்று இரவு திருமலைக்கு வருகை தந்த அமைச்சர், இங்கு தங்கி இன்று அதிகாலை வழிபாடுகளில் கலந்துகொண்டார்.
Advertisement
Advertisement