தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இனி 5%, 18% என இரண்டு அடுக்கு மட்டுமே ஜிஎஸ்டி வரி அதிரடி குறைப்பு: பால், முட்டை, பென்சில், நோட்டுப் புத்தகங்கள், மருத்துவ, ஆயுள் காப்பீடுக்கு வரி கிடையாது

புதுடெல்லி: டெல்லியில் நேற்று நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஜிஎஸ்டி வரி குறைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இனி 5%, 18% என இரண்டு அடுக்கு வரி மட்டுமே விதிக்கப்பட உள்ளது. பால், முட்டை, பென்சில், நோட்டுப் புத்தகங்கள், தனிநபர் மருத்துவ காப்பீடு, ஆயுள் காப்பீடுக்கு வரி கிடையாது. ஏசி, டிவி, சிறிய ரக கார், சரக்கு வாகனங்கள், ஆட்டோ, விவசாயப் பொருட்கள் உள்பட 175 பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது. ஆடம்பர பொருட்கள், குட்கா, பான்மசாலா, சொகுசு கார், சிகரெட், குளிர்பானங்களுக்கு 40% வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வரி விதிப்பு செப்.22ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

Advertisement

கடந்த 2017ல் அறிமுகப்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) 5%, 12%, 18%, 28% என 4 அடுக்குகளில் வரி விதிக்கப்பட்டது. இதில் முக்கிய சீர்த்திருத்தங்கள் செய்ய ஒன்றிய அரசு பரிந்துரைத்துள்ளது. இந்நிலையில், முக்கிய சீர்த்திருத்தங்கள் குறித்து முடிவெடுப்பதற்கான 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று தொடங்கியது. கூட்டத்திற்கு முன்பாக, தமிழ்நாடு, இமாச்சலப் பிரதேசம், ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளா, பஞ்சாப், தெலங்கானா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய எதிர்க்கட்சிகள் ஆளும் எட்டு மாநில நிதி அமைச்சர்களும் தனியாக ஆலோசனை நடத்தி கவுன்சில் கூட்டத்தில் வலியுறுத்த வேண்டிய விவகாரங்கள் குறித்து கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். வரி விகிதங்களை குறைப்பது, தினசரி பயன்பாட்டு பொருட்களை 5% வரி வரம்பிற்குள் கொண்டு வருவது போன்ற நடவடிக்கைகள் மூலம் ஏற்படும் வருவாய் இழப்பை ஒன்றிய அரசு ஈடு செய்ய வேண்டுமென பல்வேறு மாநில நிதி அமைச்சர்கள் வலியுறுத்தினர்.

இதைத்தொடர்ந்து கூட்டத்தில் ஜிஎஸ்டி வரி 5% மற்றும் 18% என 2 அடுக்கு மட்டுமே விதிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி, பால், முட்டை, ரொட்டி, சப்பாத்தி, எழுது பொருள்கள், வரைபடங்கள், நோட்டுப் புத்தகங்கள், ரப்பர், பென்சில், கிரையான்ஸ், மருத்துவ, ஆயுள் காப்பீடுக்கு வரி கிடையாது.

பதப்படுத்தப்பட்ட உணவுகள், பாதாம், உலர் பழங்கள், பேக் செய்யப்பட்ட சிற்றுண்டிகள், ஜாம்கள், நெய், வெண்ணெய், செல்போன், ஊறுகாய், சட்னிகள், டிராக்டர்கள், ஏசி, டிவி, கம்ப்யூட்டர் மானிட்டர், சிறிய ரக கார், சரக்கு வாகனங்கள், ஆட்டோ, விவசாயப் பொருட்கள், நெய், 20 லிட்டர் குடிநீர், தின்பண்டங்கள், சில வகை காலணிகள், ஆடைகள், மருந்துகள், மருத்துவ கருவிகள், சோப்பு, தேங்காய் எண்ணெய், ஐஸ்கிரீம் உட்பட சுமார் 175 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. குறைகிறது.

மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. வீடுகளில் பயன்படுத்தப்படும் பொருட்களுக்கு 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அனைத்து மோட்டார் வாகன பாகங்களுக்கு இனி 18% வரி விதிக்கப்பட்டுள்ளது. மின்சார ஆடம்பர பொருட்கள், குட்கா, பான்மசாலா, எஸ்.யு.வி. சொகுசு கார், சிகரெட், குளிர்பானங்களுக்கு 40% வரி விதிக்கப்பட்டுள்ளது. தற்போது மறுசீரமைக்கப்பட்ட ஜி.எஸ்.டி. விகிதத்துக்கு ஜி.எஸ்.டி. கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், 12 சதவீதத்திற்கு கீழ் வரி விதிக்கப்பட்டிருந்த 99 சதவீத பொருள்கள் 5 சதவீதத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

அதேபோல் 28 சதவீதத்திற்கு கீழ் வரி விதிக்கப்பட்டிருந்த 90 சதவீத பொருள்கள் 18 சதவீத வரி விதிப்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இந்த புதிய வரி விதிப்பு முறை வரும் 22ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

தீபாவளி பரிசு: பிரதமர் மோடி

புதிய ஜிஎஸ்டி முறை, தீபாவளி பரிசு என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: புதிய ஜிஎஸ்டி சீர்திருத்தம் ஒவ்வொரு இந்திய குடிமக்களுக்குமான தீபாவளி பரிசு. மக்களுக்கு வரி கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. சிறு, குறு, நடுத்தரத் தொழில் மற்றும் சிறு தொழில்முனைவோர்களுக்கு இது மிகப்பெரும் பலனைத் தரும். அனைத்து பொருட்களும் விலை குறைந்து கிடைக்கும். இது பொருளாதாரத்தை உயர்த்தும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

Advertisement

Related News