நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட மண்சரிவால் வீடு சேதம்
நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட மண்சரிவால் வீடு சேதமடைந்தது. மண்சரிவால் குன்னூர் - காந்திபுரத்தைச் சேர்ந்த குணசேகரன் என்பவரது வீடு சேதமானது. வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேறியதால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. காந்திபுரம் கால்வாய் தடுப்புச்சுவர் கட்டுமானப்பணி நடப்பதால் மண்சரிவு ஏற்பட்டு வீடு சேதமடைந்தது.
Advertisement
Advertisement