நீலகிரி மாவட்டத்தில் குளிர் அதிகரிப்பு: மக்கள் அவதி
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் தற்போது காலை மற்றும் மாலை நேரங்களில் பனிமூட்டம் காணப்படுவதால் குளிர் அதிகரித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக மழை குறைந்துள்ளது. இந்நிலையில், அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் பனிமூட்டம் காணப்படுகிறது.
Advertisement
குறிப்பாக, ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பனி மூட்டம் அதிகம் காணப்படுகிறது. இதனால், மாவட்டம் முழுவதும் குளிர் அதிகரித்துள்ளது. பகல் ேநரங்களில் வெயில் காணப்பட்டாலும், தாழ்வான இடங்கள் மற்றும் நீர் நிலைகளுக்கு அருகில் சென்றால் குளிரின் தாக்கம் மிக அதிகமாக காணப்படுகிறது. மேலும், காலநிலை மாற்றத்தால் பலரும் சளி, காய்ச்சல் போன்ற நோய் பாதிப்பால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
Advertisement