Home/செய்திகள்/Nilgiris Coimbatore Very Heavy Rain Orange Alert Met Office
நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
01:00 PM Jun 26, 2024 IST
Share
சென்னை: நீலகிரி, கோவை மாவட்டங்களில் 12 முதல் 20 செ.மீ வரை மழை பொழிவிற்கான வாய்ப்பு இருப்பதால் அம்மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.