நைஜீரியாவில் பயங்கரம் மசூதியில் துப்பாக்கிச்சூடு: 13 பேர் பலி
அபுஜா: ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் பல்வேறு ஆயுத குழுக்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்த குழுக்களுக்கு இடையேயான கோஸ்டி மோதலில் தொடர்ச்சியாக உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் அந்நாட்டின் வடமேற்கில் கட்சினா மாகாணத்தின் உங்குவான் மண்டாவ் நகரில் உள்ள ஒரு மசூதியில் நேற்று காலை தொழுகை நடந்து கொண்டிருந்தது.
Advertisement
அப்போது துப்பாக்கிகளுடன் மசூதிக்குள் நுழைந்த மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு யாரும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை. முன்னதாக கடந்த மாதம் பெனு மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்துக்குள் நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதிலும், வீடுகளுக்கு தீவைத்ததிலும் 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Advertisement