தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அடுத்த வெற்றிக்காக இன்று ஐதராபாத்-சென்னை மோதல்

ஐதராபாத்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 18வது லீக் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் களம் காண உள்ளன. ஐதராபாத்தில் இன்று நடைபெறும் இந்த ஆட்டம் இந்த 2 அணிகளும் 4வது லீக் ஆட்டமாகும். இதுவரை 3 ஆட்டங்களில் ஆடியுள்ள நிலையில் ஐதராபாத் ஒரு வெற்றி, 2 தோல்விகளுடனும், சென்னை 2வெற்றி, ஒரு தோல்வியுடனும் உள்ளன. மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் சாதனை வெற்றியை பெற்ற பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஐதராபாத், தோற்ற ஆட்டங்களிலும் நூலிழையில்தான் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது.
Advertisement

அதற்கேற்ப மயாங்க், அபிஷேக், திரிபாதி, மார்க்ரம், கிளாஸன் என அதிரடி வீரர்கள் வரிசைக் கட்டி எதிரணியை அச்சறுத்தி வருகின்றனர். பந்து வீச்சாளர்களும் கூடுதல் கவனம் செலுத்தினால் ருதுராஜ் தலைமையிலான நடப்பு சாம்பயின் சென்னைக்கு இன்றைய ஆட்டம் பெரும் அச்சுறுத்தலாக அமையலாம். அதே நேரத்தில் சென்னையின் ருதுராஜ், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் விளையாடினால் எதிரணிக்கு தடுமாறறம்தான். கூடவே ரகானே, மிட்சல், துபே, ஜடேஜா, முஸ்டாஃபிசூர், பதிரானா ஆகியோரும் ஆடினால் எதிரணிக்கு கடும் சவாலை சந்திக்க வேண்டி இருக்கும். ஆனாலும் இதுவரை நடந்த ஆட்டங்களில் சொந்த மண்ணில் விளையாடுவது ஐதராபாத்துக்கு சாதகமாகவும், வெளியூரில் விளையாடுவது சென்னைக்கு பாதகமாகவும் அமைந்துள்ளன.

நேருக்கு நேர்

* ஐதராபாத்-சென்னை அணிகள் ஐபிஎல் தொடர்களில் நேருக்கு நேர் மோதிய 19 ஆட்டங்களில் சென்னை 14லும், ஐதராபாத் 5லும் வென்று இருக்கின்றன.

* இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான ஆட்டங்களில் அதிகபட்சமாக சென்னை 223, ஐதராபாத் 192ரன் எடுத்துள்ளன. குறைந்தபட்சமாக ஐதராபாத் 134, சென்னை 132ரன் எடுத்துள்ளன.

* இந்த 2 அணிகளும் கடைசியாக விளையாடிய 5 ஆட்டங்களில் சென்னை 4-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

* இவ்விரு அணிகளும் ஐபிஎல் தொடர்களில் மற்ற அணிகளுடனும் கடைசியாக விளையாடிய 5 ஆட்டங்களில் சென்னை 4-1 என்ற கணக்கிலும், ஐதராபாத் 1-4 என்ற கணக்கில் வெற்றி, தோல்விகளை சந்தித்துள்ளன.

Advertisement