நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: ஜிம்பாப்வே 125 ரன்னில் ஆல் அவுட்: ஹென்றி 5, பெளல்க்ஸ் 4 விக்கெட் வீழ்த்தி அசத்தல்
ஹராரே: நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்டில் ஜிம்பாப்வே 125 ரன்னில் ஆல் அவுட்டானது. நியூசிலாந்து அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வேவுக்கு சென்றது. முதல் டெஸ்டில் 9 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. 2வது டெஸ்ட் போட்டி குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நேற்று தொடங்கியது.
டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பேட்டிங் செய்தது. நியூசிலாந்து பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாத ஜிம்பாப்வே அணி 48.5 ஓவரில் 125 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக பிரெண்டன் டெய்லர் 44 ரன் எடுத்தார். நியூசிலாந்து பந்துவீச்சில் மேட் ஹென்றி 5 விக்கெட்டையும், ஜகரி பெளல்க்ஸ் 4 விக்கெட்டையும் வீழ்த்தினர்.