புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு ஊட்டி-குன்னூர் இடையே சிறப்பு மலை ரயில் சேவை
ஊட்டி: புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு ஊட்டி-குன்னூர் இடையே முன்னிட்டு சிறப்பு மலை ரயில் சேவை இயக்கப்படுகிறது. பாரம்பரிய அந்தஸ்து பெற்ற நீலகிரி மலை ரயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் ஊட்டியிலிருந்து – மேட்டுப்பாளையம் வரை மலை ரயில் இயக்கப்படுகிறது. இந்த மலை பாதையின் இருபுறங்களிலும் அழகிய இயற்கை காட்சிகள், வனவிலங்குகளும் தென்படுவதால் இந்த ரயிலில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பயணிக்கின்றனர். இந்நிலையில், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு ஊட்டி - குன்னூர் மற்றும் ஊட்டி - கேத்தி - ஊட்டி இடையே வரும் டிசம்பர் 28ம் தேதி முதல் ஜனவரி 2ம் தேதி வரை சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் ஊட்டி இடையே டிசம்பர் 25ம் தேதி துவங்கி ஜனவரி 1ம் தேதி வரை இயக்கப்படுகிறது. சுற்றுலா பயணிகள் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என தென்னக ரயில்வே சேலம் கோட்டம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.