சாலை தடுப்பில் கார் மோதி தீப்பிடித்துபுதுமாப்பிள்ளை பலி
திருவாரூர்: திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கு சென்ற கார், நாகப்பட்டினம் பைபாஸ் சாலையில் நேற்று அதிகாலை 2.25 மணியளவில் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, தாறுமாறாக ஓடி சாலை தடுப்பில் மோதி 20 மீட்டர் தூரத்தில் வயல் பகுதியில் விழுந்து தீப்பற்றி எரிந்தது. இதனை பார்த்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள், திருத்துறைப்பூண்டி காவல்நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு வீரர்கள், தீயை போராடி அணைத்தனர். இதில் கார் முழுவதும் எரிந்த நிலையில், காரை ஓட்டி வந்த வாலிபர் உடல் கருகி காருக்குள் சடலமாக கிடந்தார். இதுதொடர்பாக திருத்துறைப்பூண்டி போலீசார் விசாரணை நடத்தியதில், திருவாரூரை சேர்ந்த ரபிக்(25) என்பதும், கடந்த 5மாதங்களுக்கு முன் திருமணமானதும், புதுக்கோட்டையில் உள்ள தனது மனைவியை பார்ப்பதற்காக காரில் சென்ற போது விபத்துக்குள்ளானதும் தெரியவந்தது.