திருப்பூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த சாக்கோட்டையை சேர்ந்தவர் மணிகண்டன் (29). பர்னிச்சர் கடை ஊழியர். இவரது நிறுவனத்தில் வேலை செய்த சுபலட்சுமியை (25) காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி சென்னையில் உள்ள ஒரு கோயிலில் திருமணம் செய்தார். காதல் தம்பதி திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அடுத்த குட்டகாட்டு புதூரில் உள்ள சுபலட்சுமியின் அக்காள் மேனகாவின் வீட்டில் வசித்து வந்தனர். மேனகா கணவருடன் திருச்சியில் நடந்த திருவிழாவுக்கு சென்றுவிட்டார். நேற்று முன்தினம் இரவு மணிகண்டன் ஓட்டலில் மனைவிக்கு ஆசை ஆசையாக சிக்கன் ரைஸ் வாங்கி வந்தார். ஆனால் சுபலட்சுமி தனது அக்காள் குடும்பத்துடன் கோயிலுக்கு சென்றுள்ளார். இதனால் அசைவம் வேண்டாம் என்று மறுத்துள்ளார். இதில் விரக்தியடைந்த மணிகண்டன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.