2 சிப்செட்டுடன் புதிய மொபைல் அறிமுகம்...!
மோட்டோரோலா நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் மோட்டோ ஜி67 பவர் 5ஜி (Moto G67 Power 5G) என்ற ஸ்மார்ட் ஃபோனை அறிமுகப்படுத்தியுள்ளது. இப்புதிய ஸ்மார்ட்ஃபோனில் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 சிப்செட் மற்றும் ஒரு பெரிய 7,000mAh சிலிக்கான்-கார்பன் பேட்டரி உள்ளது. புதிய மோட்டோ ஜி67 பவர் இந்தியாவில் பிரபல இ-காமர்ஸ் பிளாட்ஃபார்மாக இருக்கும் பிளிப்கார்ட் மற்றும் மோட்டோரோலாவின் வெப்சைட் மூலம் வாங்க கிடைக்கும். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மோட்டோ ஜி67 பவர் 5ஜி மொபைலின் விலை, எப்போது முதல் விற்பனைக்கு வரும் மற்றும் சிறப்பம்சங்கள் விவரம் இதோ...!
Moto G67 Power மொபைல் இந்தியாவில் தற்போதைக்கு 8GB ரேம் 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் என்ற சிங்கிள் வேரியன்ட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இதன் விலை ரூ.15,999-ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. எனினும், அறிமுக சலுகையின் ஒரு பகுதியாக இந்த பேஸ் மாடல் ரூ.14,999-க்கு வாங்க கிடைக்கும். இதே மொபைலின் 8GB ரேம் 256GB ஸ்டோரேஜ் கொண்ட வேரியன்ட் பின்னர் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. புதிய மோட்டோ ஜி67 பவர் மொபைலானது பாராசூட் பர்பிள், ப்ளூ குராக்கோ மற்றும் கிளின்டரோ என மூன்று பான்டோன்-குரேட்டட் கலர்களில் வருகிறது. இந்த மொபைல் வரும் நவம்பர் 12 முதல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட் மற்றும் பிளிப்கார்ட் மூலம் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது.
இந்த மொபைலில் ஃபுல் -HD ரெசல்யூஷன் (1,080 x 2,400 பிக்சல்ஸ்), 120Hz ரெஃப்ரஷ் ரேட் மற்றும் HDR10 சப்போர்ட் உடன் கூடிய 6.7-இன்ச் LCD டிஸ்ப்ளே உள்ளது. நீடித்து உழைக்க, இந்த மொபைல் மேலே ஒரு கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ ப்ரொட்டக்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் MIL-810H மிலிட்டரி கிரேட் ட்ராப் ப்ரொட்டக்ஷனை வழங்குகிறது. இந்த மொபைல் வீகன் லெதர் ஃபினிஷ் கொண்டுள்ளது, டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டென்ஸிற்கான IP64 ரேட்டிங்கைக் கொண்டுள்ளது.இந்த மொபைலில் 4nm ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 சிப்செட் உள்ளது. இது 2.4GHz வேகத்தில் இயங்குகிறது. இது 8GB ரேம் மற்றும் 256GB வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜூடன் இணைக்கப்பட்டுள்ளது. ரேம் பூஸ்ட் 4.0 மூலம் ரேம் கெப்பாசிட்டியை 24GB வரை விரிவாக்க முடியும். கேமராவை பொறுத்தவரை இந்த மொபைலின் பின்பக்கம் ட்ரிபிள் ரியர் கேமரா யூனிட் உள்ளது.
இதில், 50MP சோனி LYT-600 பிரைமரி சென்சார், 8MP அல்ட்ரா-வைட் ஷூட்டர் மற்றும் 2-இன்-1 ஃப்ளிக்கர் சென்சார் ஆகியவை அடங்கும்.மொபைலின் முன்புறத்தில் 32MP செல்ஃபி கேமரா உள்ளது. முன்பே கூறியபடி இப்புதிய மோட்டோரோலா மொபைலில் 7,000mAh சிலிக்கான்-கார்பன் பேட்டரி உள்ளது. இது, 33 மணி நேர வீடியோ பிளேபேக் மற்றும் 49 மணிநேர காலிங் பேக்கப்பை வழங்குவதாக கூறப்படுகிறது. மேலும், இது 30W ஃபாஸ்ட் வயர்டு சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது. டால்பி அட்மோஸுடன்கூடிய டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ சப்போர்ட் ஆகியவை இதில் இருக்கும் பிற அம்சங்களில் அடங்கும்.