இன்ஸ்டாகிராமில் இளம் வயதினர் கணக்குகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்த மெட்டா
வாஷிங்டன்: இன்ஸ்டாகிராமில் இளம் வயதினர் கணக்குகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை மெட்டா விதித்தது. பாலியல் உள்ளடக்கிய காட்சிகள், போதைப் பொருள், அபாயகரமான சண்டை காட்சிகள் அல்லாத வீடியோக்களை காண வழிவகை செய்யப்பட்டுள்ளது. பெற்றோரின் அனுமதியின்றி இன்ஸ்டாகிராமில் இதற்கான வசதிகளை மாற்ற முடியாது. இந்த கட்டுப்பாடுகளை விரும்பும் பெற்றோருக்கு, இன்ஸ்டாகிராமில் Limited Content என்ற வசதி கொண்டு வரப்பட்டுள்ளதுசிறார்கள் தங்களை 18 வயதுக்கு மேற்பட்டோர் எனக் கூறினாலும் அதனை கண்டறிய அதற்கான தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். தேவையில்லாதவற்றை பின்தொடர்வதும், தகவல் அனுப்புவதும், கருத்து தெரிவிப்பதும் தடுக்கப்படும். டீன் அக்கவுண்ட்ஸ் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு மேற்கொள்ளப்படும் மிக முக்கியமான ஒன்று இது. PG-13 தர மதிப்பீட்டு விதிகளுக்கு இணங்க இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.