கொம்பாக்கத்தில் ரூ.20 லட்சத்தில் புதிய மின்மாற்றி
புதுச்சேரி : கொம்பாக்கம் ஜோதி நகர் மக்களின் மின் பற்றாக்குறையை போக்கும் வகையில் மின்துறை மூலம் புதியதாக நிறுவப்பட்ட மின்மாற்றியை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு எதிர்க்கட்சி தலைவர் சிவா அர்ப்பணித்தார்.
புதுச்சேரி, வில்லியனூர் தொகுதி, கொம்பாக்கம் வார்டுக்குட்பட்ட ஜோதி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்களின் மின் பற்றாக்குறையை போக்கும் வகையில் மின்துறை மூலம் ரூ.19 லட்சத்து 92 ஆயிரம் மதிப்பில் புதிய கூடுதல் மின்மாற்றி அமைக்கப்பட்டு, அதனை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இயக்கி வைக்கும் நிகழ்ச்சி கொம்பாக்கம் ஜோதி நகரில் நடந்தது.
தொடர்ந்து, அப்பகுதி மக்களுக்கு தேவையான சாலை வசதி, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுத்த சிவா எம்எல்ஏவுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்து, நினைவு பரிசுகளை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் மின்துறை உதவி பொறியாளர் ரமேஷ், இளநிலை பொறியாளர் அருணகிரிநாதர், உத்திராடம் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் தேசிகன், கந்தசாமி, ஜனா, தேவநாதன், அருண், வேலு, வேலாயுதம், திமுக தொகுதி செயலாளர் மணிகண்டன், வர்த்தக அணி சரவணன், தொமுச அங்காளன், அரிகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.