நியூ இண்டியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் 550 அதிகாரிகள்
பணி: நிர்வாக அதிகாரிகள் (அட்மினிஸ்டிரேட் ஆபீசர்ஸ்)- (ஜெனரலிஸ்ட்ஸ் மற்றும் ஸ்பெஷலிஸ்ட்ஸ்) (ஸ்கேல்-1)
மொத்த காலியிடங்கள்: 550. சம்பளம்: ரூ.50,925- ரூ.96,765.
வயது: 01.08.2025 தேதியின்படி 21 முதல் 30க்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
துறை வாரியாக காலியிடங்கள் விவரம்:
1. ஜெனரலிஸ்ட்: 193 இடங்கள் (பொது-78, ஒபிசி-52, எஸ்சி-29, எஸ்டி-15, பொருளாதார பிற்பட்டோர்-19). இவற்றில் 8 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தகுதி: ஏதாவதொரு பாடத்தில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை/முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
2. ஏஓ ஹெல்த்: 50 இடங்கள் (பொது-19, ஒபிசி-14, எஸ்சி-8, எஸ்டி-4, பொருளாதார பிற்பட்டோர்-5). இவற்றில் 2 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தகுதி: எம்பிபிஎஸ் பட்டம் பெற்று இந்திய மருத்துவ கவுன்சிலில் படிப்பை பதிவு செய்திருக்க வேண்டும்.
3. அக்கவுன்ட் ஸ்பெஷலிஸ்ட்ஸ்: 25 இடங்கள். (பொது-10, ஒபிசி-7, எஸ்சி-4, எஸ்டி-2, பொருளாதார பிற்பட்டோர்-2). இவற்றில் ஓரிடம் மாற்றுத்திறனாளிக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தகுதி: சிஏ/ஐசிடபிள்யூஏ/பி.காம்/எம்.காம் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
4. லீகல் ஸ்பெஷலிஸ்ட்ஸ்: 50 இடங்கள் (பொது-20, ஒபிசி-13, எஸ்சி-8, எஸ்டி-4, பொருளாதார பிற்பட்டோர்-5). இவற்றில் 3 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தகுதி: சட்ட பாடப்பிரிவில் இளநிலை/முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
5. ஐடி/ஆட்டோமொபைல் இன்ஜினியர்கள்: 100 இடங்கள் (பொது-40, ஒபிசி-27, எஸ்சி-15, எஸ்டி-7, பொருளாதார பிற்பட்டோர்-11.). இவற்றில் 4 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தகுதி: ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் சம்பந்தப்பட்ட பாடத்தில் இளநிலை/முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஐடி பிரிவுக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ்/கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
6. பிசினஸ் அனலிசிஸ்ட்ஸ்: 75 இடங்கள் (பொது-30, ஒபிசி-20, எஸ்சி- 11, எஸ்டி-6, பொருளாதார பிற்பட்டோர்-8). இவற்றில் 3 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தகுதி: புள்ளியியல்/கணிதம்/டேட்டா சயின்ஸ் ஆகிய ஏதாவதொரு பாடத்தில் இளநிலை/முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
7. ரிஸ்க் இன்ஜினியர்கள்: 50 இடங்கள் (பொது-19, ஒபிசி-14, எஸ்சி-8, எஸ்டி-4, பொருளாதார பிற்பட்டோர்-5). இவற்றில் 2 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தகுதி: இன்ஜினியரிங் பாடப்பிரிவுகள் ஏதாவது ஒன்றில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
8. கம்பெனி செக்ரட்டரி: 2 இடங்கள் (பொது). தகுதி: ஐசிஎஸ்ஐ அங்கீகாரம் பெற்ற ஏசிஎஸ்/எப்சிஎஸ் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
9. ஆக்சுரியல் ஸ்பெஷலிஸ்ட்ஸ்: 5 இடங்கள் (பொது-4, ஒபிசி-1). தகுதி: ஆக்சுரியல் சயின்ஸ் பிரிவை ஒரு பாடமாகக் கொண்டு ஏதாவதொரு இளநிலை பட்டத்தை பெற்றிருக்க வேண்டும்.
பொது மற்றும் ஒபிசியினர் குறைந்த பட்சம் 60% மதிப்பெண்களுடனும், எஸ்சி/எஸ்டி பிரிவினர் குறைந்தபட்சம் 55% மதிப்பெ்ணகளுடனும் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
கட்டணம்: பொது மற்றும் ஒபிசியினருக்கு ரூ.1000/. எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100/- இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.இரு கட்டங்களாக நடைபெறும் ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். முதற்கட்ட ஆன்லைன் எழுத்துத் தேர்வு தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, சேலம், தஞ்சை, திருச்சி, நெல்லை, வேலூர், கடலூர், தர்மபுரி, தூத்துக்குடி, நாமக்கல் ஆகிய இடங்களில் நடைபெறும். 2ம் கட்ட ஆன்லைன் எழுத்துத் தேர்வு சென்னையில் மட்டும் நடைபெறும். www.newindia.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.08.2025.