தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஈரோட்டில் ரூ.87 லட்சத்தில் புதிய வகுப்பறை கட்டிடம், நியாய விலைக்கடை

*அமைச்சர் திறந்து வைத்தார்

Advertisement

ஈரோடு : ஈரோடு திண்டலில் ரூ.87 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் நியாய விலைக்கடைக்கான புதிய கட்டிடத்தை அமைச்சர் சு.முத்துசாமி திறந்து வைத்தார். ரூ.35 லட்சம் மதிப்பில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுமான பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

ஈரோடு அடுத்த திண்டல் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.64 லட்சம் மதிப்பில், கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டிடங்களை, வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி திறந்து வைத்தார்.

மேலும், ரூ.35 லட்சம் மதிப்பில், புதிதாக கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டுமானப் பணிக்காக அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, கீழ் திண்டலில் ரூ.23 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாய விலைக்கடைக்கான புதிய கட்டிடத்தையும் அவர் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் சு.முத்துசாமி பேசியதாவது:

தமிழ்நாடு முழவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு சிறப்பு திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். உதாரணமாக, வெளிநாடு பயணத்தின் மூலம் பல்வேறு தொழில் முதலீட்டுகளை தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்துள்ளார்.

இதன் மூலம் எண்ணற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

மேலும், ஈரோடு மாவட்டத்திற்கு எண்ணற்ற திட்டங்களை வழங்கி வருகிறார்.

சிக்கய்ய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மிகப்பெரிய அளவில் விளையாட்டு மைதானம், நூலகம் மாணவ, மாணவியர்கள் போட்டித் தேர்வுகளுக்கு பயில பயிற்சி மையம், திண்டல் வேலாயுதசாமி கோயிலில் மிகப்பெரிய முருகன் சிலை அமைக்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் நடந்த அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி, சென்னம்பட்டி வனப்பகுதி எல்லைக்குள் 3600 அடி உயரத்தில் அமைத்துள்ள கத்திரிமலை கிராமத்திற்கு ரூ.3.32 கோடி மதிப்பில் மின்சாரம் வழங்கும் திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக, ஈரோடு திண்டல் மலை நகரக்கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் இயங்கும் கீழ்திண்டல் நியாய விலைக்கடைக்கு புதிய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த நியாயவிலைக்கடையில் 851 அரிசி குடும்ப அட்டைதாரர்களும், 139 சர்க்கரை குடும்ப அட்டைதாரர்களும், 3 காவலர் குடும்ப அட்டைதாரர்களும், 26 கௌரவ குடும்ப அட்டைதாரர்களும் பயன்பெற்று வருகின்றனர். மேலும், முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 46 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற்று வருகின்றனர்.

இந்த நியாய விலைக்கடை குறைந்த இடவசதி கொண்டு வாடகை கடையில் செயல்பட்டு வந்த நிலையில், இப்பகுதியிலுள்ள பொதுமக்கள் சொந்தமாக புதிய நியாய விலைக் கடை கட்டிடம் கட்டித் தருமாறு கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதன் அடிப்படையில் ஈரோடு மேற்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் நிதி திட்டம் 2024- 2025-ன் கீழ் திண்டல் ஆரம்ப சுகாதார நிலையம் எதிரில் புதிய நியாய விலைக்கடை கட்டிடம் ரூ.23 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

திண்டல் அரசு மேல்நிலைப்பள்ளியில், ஒளிரும் ஈரோடு பவுண்டேஷன் மற்றும் ஈரோடு ஸ்பைஸ் ரவுண்ட் டேபிள் ஆகியோரின் பங்களிப்புடன் ரூ.64 லட்சம் மதிப்பில், புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள 4 கூடுதல் வகுப்பறை கட்டிடங்களும் மாணவ, மாணவியர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மேலும், அதே பள்ளியில் மாநகராட்சி கல்வி நிதியிலிருந்து ரூ.35 லட்சம் மதிப்பில், கூடுதலாக 2 வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து, கூரபாளையம், கூரை மஹாலில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமினை, அமைச்சர் சு.முத்துசாமி நேரில் சென்று பார்வையிட்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் கந்தசாமி, பிரகாஷ் எம்.பி, ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ வி.சி.சந்திரகுமார், துணை மேயர் செல்வராஜ், மாநகராட்சி ஆணையாளர் அர்பித் ஜெயின் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுப்பாராவ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கந்தராஜா, துணை ஆணையர் தனலட்சுமி, மண்டல தலைவர்கள் பழனிச்சாமி, சசிகுமார் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement