நேபாளத்தில் ஃபேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டா, யூடியூப், ரெட்டிட் போன்ற சமூக ஊடகங்களுக்குத் தடை..!!
நேபாளம்: உள்நாட்டு விதிமுறைகளின்படி பதிவு செய்யத் தவறியதற்காக, நேபாளத்தில் ஃபேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டா, யூடியூப், ரெட்டிட் போன்ற 26 சமூக ஊடகங்களுக்குத் நேபாள அரசு தடை விதித்து உத்தரவிட்டது. உலக அளவில் சமூக ஊடகங்கள் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சில விதிமுறைகளை பின்பற்றுமாறு நேபாள அரசு நிறுவனங்களுக்கு தெரிவித்தது.
அதன்படி, வெளிநாட்டுச் சமூக ஊடக நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களை நேபாளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும், உள்நாட்டு வரி கொள்கைகளுக்கு கட்டுப்பட வேண்டும் என்றும் ஒரு புதிய சட்டத்தை நிறைவேற்றியது. நேபாளத்தில் தங்கள் நிறுவனங்களைப் பதிவு செய்து, உள்ளூர் தொடர்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று அரசு பலமுறை தெரிவித்து நோட்டீஸ் அனுப்பியது இதனை மதிக்காத நிறுவனங்கள் மீது நேபாள அரசு நடவடிக்கை மேற்கொண்டு 26 சமூக ஊடகங்களுக்கு தடை விதித்தது. இந்த தடையால், பல நிறுவனங்கள் தங்கள் வர்த்தகத்தை இழந்ததுடன், நேபாள மக்களின் தகவல் தொடர்புக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.