நெல்லை அரசு மருத்துவமனையில் கிறிஸ்தவ மதச் சின்னம் என வதந்தி : தமிழ்நாடு அரசு தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்
Advertisement
பரவும் செய்தி
"நெல்லை அரசு மருத்துவமனையில் கிறிஸ்துவ மத போதனைகள் வாக்கியங்களுடன் கிறிஸ்துவ படங்கள் வைக்கப்பட்டிருக்கிறது" என்ற பதிவுடன் சில புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகிறது.
உண்மை என்ன?
இது தவறான தகவல். நெல்லை அரசு மருத்துவமனை படத்தில் இருப்பது கி.மு 460 முதல் 375 வரை வாழ்ந்த கிரேக்க மருத்துவர் ஹிப்போகிரட்டீஸ். மருத்துவ உலகின் தந்தை என்று அழைக்கப்படும் இவர்தான் நோய்களுக்கு அறிவியல் காரணங்களை முன்வைத்து அடிப்படை மருத்துவ நெறிகளை வகுத்தவர். மருத்துவ மாணவர்கள், பயிற்சி மருத்துவர்கள் ஹிப்போகிரட்டீஸ் உறுதிமொழியை ஏற்பது நடைமுறையில் உள்ளது. அதில் உள்ள காடுசியஸ் படம் மருத்துவத்துறையின் சின்னமாகும். இவற்றுக்கும் கிறிஸ்துவ மதத்திற்கும் தொடர்பில்லை. வதந்திகளைப் பரப்பாதீர்!
Advertisement