நெல்லை - சென்னை சிறப்பு ரயில் ஜூன் மாதம் முழுவதும் நீட்டிப்பு: பயணிகள் மகிழ்ச்சி
இதுபோல் நாகர்கோவிலில் இருந்து சென்னை எழும்பூருக்கு மற்றொரு சிறப்பு ரயிலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது. முன்பு கேரள மார்க்கமாக இயங்கிய இந்த ரயில், தற்போது தமிழகம் வழியாக இயக்கப்பட உள்ளது. அதன்படி நாகர்கோவிலில் இருந்து வரும் 9ம் தேதி மற்றும் 23ம் தேதி ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 11.15 மணிக்கு இந்த ரயில் புறப்படுகிறது. வள்ளியூர், நெல்லை, கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி வழியாக இந்த ரயில் சென்னை எழும்பூருக்கு திங்கள் கிழமை காலை 11.15 மணிக்கு போய் சேரும். மறுமார்க்கமாக சென்னை எழும்பூரில் இருந்து வரும் 10 மற்றும் 24ம் தேதிகளில் திங்கள் கிழமை மதியம் 3 மணிக்கு புறப்பட்டு, மறுதினம் செவ்வாய்கிழமை காலை 3.15 மணிக்கு நாகர்கோவில் போய் சேரும். நெல்லை வழியாக இரு சிறப்பு ரயில்கள் இம்மாதத்தில் இயக்கப்படுவதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.