நெல்லை கிழக்கு திமுக மாவட்ட பொறுப்பாளராக இருந்த கிரகாம்பெல் மாவட்ட செயலாளராக நியமனம்..!!
சென்னை: நெல்லை கிழக்கு திமுக மாவட்ட பொறுப்பாளராக இருந்த கிரகாம்பெல் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் கார்த்திக் நீக்கம் செய்யப்பட்டார். உடன்பிறப்பே வா மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்திய ஆலோசனைக்கு பிறகு நடவடிக்கை எடுக்கப்பட்டது. திமுகவில் பல்வேறு ஒன்றிய, நகர, பகுதி செயலாளர்களும் மாற்றப்பட்டுள்ளனர். தொகுதி வாரியாக திமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வரும் நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அரூர் சட்டமன்ற தொகுதி, மாவட்டச் செயலாளர் பழனியப்பனிடம் இருந்து ஆ.மணிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
Advertisement
Advertisement