தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

நெய்க்குப்பை கிராமத்தில் 15 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த தீமிதி திருவிழா

பெரம்பலூர்: நெய்க்குப்பை கிராமத்தில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த தீ-மிதி திருவிழா. குழந்தையுடன், கும்பத்துடன் என 70க்கும் மேற்பட்டோர் தீ-மிதித்து நேர்த்திக் கடன் நிறைவேற்றினர்.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுக்கா, நெய்க்குப்பை கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் திரௌபதி அம்மனுக்கு, பாரத சொற்பொழிவு மற்றும் தீமிதி திருவிழா 15 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதனையொட்டி கடந்த மே மாதம் 19ம் தேதி திங்கட் கிழமை மாலை 5 மணிக்கு சாமி குடி அழைப்பும், மாலை 6 மணிக்கு கொடியேற்றுதலும் நடைபெற்றது. 30ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 7 மணிக்கு திருக்கல்யாணம் வைபோக நிகழ்ச்சி நடை பெற்றது. நேற்றுமுன்தினம் (5ம் தேதி) வியாழக்கிழமை காலை 9 மணிக்கு சோறு ஊட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு 10 மணிக்கு மேல் சாமி திரு வீதி உலா மற்றும் கரகாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான நேற்று (6ம்தேதி) வெள்ளிக்கிழமை மாலை 4:30 மணிக்கு தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் அக்கிரமத்தைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் தோள்களில் குழந்தையுடனும், தலையில் கும்பத்துடனும், கைகளில் வேப்பிலைகளுடனும் பக்தியுடன் இறங்கி தீமித்தனர். இதனைக் காண நெய்க்குப்பை கிராம மக்கள் மட்டுமின்றி அருகில் உள்ள பிம்பலூர், பசும்பலூர், பாண்டகப்பாடி, அனுக்கூர், தொண்டப்பாடி பாலையூர், வேப்பந்தட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த திரௌபதி அம்மன் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அம்மனை பக்தியுடன் வழிபட்டுச் சென்றனர். இரவு 10 மணிக்கு நாடகம் நடைபெற்றது. இன்று காலையில் மஞ்சள் நீராட்டு விழாவும், மதியம் அம்மன் கூந்தல் முடித்தல் நிகழ்ச்சியும் இரவு தர்மர் பட்டாபிஷேக நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

Related News