நீட் தேர்வுக்கு எதிராக கர்நாடக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்: பாஜ மற்றும் மஜத வெளிநடப்பு
Advertisement
இரண்டாமாண்டு பியூசி தேர்வில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்ற கருத்தை கர்நாடக சட்டபேரவையில் நேற்று தீர்மானமாக முதல்வர் சித்தராமையா கொண்டு வந்து தாக்கல் செய்தார். சித்தராமையா தாக்கல் செய்த தீர்மானம் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரவையில் இருந்து பாரதிய ஜனதா மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
Advertisement