மின்சாரம் துண்டிப்பால் நீட் மறு தேர்வு நடத்த கோரிய வழக்கு தள்ளுபடி : தேர்வு முடிவுகளை வெளியிட தடையில்லை எனவும் உத்தரவு!!
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மனுவுக்கு பதிலளிக்குமாறு ஒன்றிய அரசு, தேசிய மருத்துவ ஆணையம், தேசிய தேர்வு முகமை ஆகியவற்றுக்கு உத்தரவிட்டதுடன், அதுவரை நீட் தேர்வு முடிவுகளை வெளியிடக்கூடாது என்று இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி சி.குமரப்பன் கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, ஒன்றிய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமை தரப்பில், "மின்சாரம் துண்டிக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தியதில், நீட் தேர்வுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிய வந்துள்ளது.மாணவர்கள் பெரும்பாலான கேள்விகளுக்கு பதிலளித்துள்ளதால் மறு தேர்வு நடத்த முடியாத," என்று வாதிடப்பட்டது. இந்த நிலையில் இன்று நீதிபதி வழங்கிய உத்தரவில், " 22 லட்சம் மாணவர்கள் எழுதிய நிலையில் மறுதேர்வு நடத்தினால் தீவிர தாக்கம் ஏற்படும். ஆகவே மின்சாரம் துண்டிப்பால் நீட் மறு தேர்வு நடத்த கோரிய மாணவர்கள் வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. நீட் தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்குகிறோம், "இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.