தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நீட் மோசடி: பீகாரில் நீட் தேர்வுக்கு 24 மணி நேரத்திற்கு முன்பு மாணவர்களிடம் ரூ.32 லட்சம் பெற்று கொண்டு வினாத்தாளை கசியவிட்டதாக தரகர்கள் ஒப்புதல் வாக்குமூலம்

Advertisement

பீகார்: பீகாரில் நீட் தேர்வுக்கு 24 மணி நேரத்திற்கு முன்பு மாணவர்களிடம் 32 லட்சம் ரூபாயை பெற்று கொண்டு வினாத்தாளை கசியவிட்டதாக தரகர்கள் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருப்பது பெற்றோர்களையும், மாணவர்களையும், திடுக்கிட வைத்துள்ளது. கடந்த மே 5ம் தேதி நாடு முழுவதும் 24 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதிய நிலையில் ஜூன் 14ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் சற்று எதிர்பாராத வகையில் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற ஜூன் 4 தேதி அன்று நீட் தேர்வு முடிவுகள் திடீரென வெளியாகி பலத்த சந்தேகத்தை கிளப்பியது. அந்த சந்தேகத்திற்கு பளு சேர்க்கும் விதமாக நீட் தேர்வில் நடத்தப்பட்ட முறைகேடுகள் மற்றும் மோசடிகள் ஒவ்வொன்றாக வெளியான வண்ணம் உள்ளன.

அதன் ஒரு பகுதியாக பீகார் மாநிலம் பாட்னாவில் சட்ட விரோதமாக கல்வி ஆலோசனை மையத்தை நடத்திவந்த 2 பேர் மற்றும் ஒரு தரகர் என 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் 3 பெரும் அளித்துள்ள ஒப்புதல் வாக்குமூலம் பலரையும் திடுக்கிட வைத்துள்ளது. சிக்கந்தர், நிதிஷ் மற்றும் அமித் ஆனந்த் ஆகிய 3 பேரும் நீட் தேர்வு வினாத்தாளை தேர்வுக்கு 24 மணி நேரத்திற்கு முன்பு கசியவிட்டது உறுதியாகியுள்ளது. மாணவர்களிடம் ரூ.30 முதல் ரூ.32 லட்சம் பெற்று கொண்டு இந்த வினாத்தாளை அவர்களுக்கு கொடுத்ததாக 3 பேரும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர். இந்த 3 பேரிடம் தொடர்பில் இருந்த 13 மாணவர்களை பீகார் சிறப்பு புலனாய்வு குழு கண்டறிந்துள்ளது. அவர்களில் 4 பேர் உடனடியாக கைதான நிலையில் 9 மாணவர்களுக்கு தங்களின் பெற்றோர்களுடன் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Advertisement