டயமண்ட் லீக் இறுதிப் போட்டி : நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கம் வென்றார்
சூரிச் : சுவிட்சர்லாந்து நாட்டின் சூரிச் நகரில் நடைபெறும் டயமண்ட் லீக் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் இந்தியா வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கம் வென்றார். ஜெர்மனி சேர்ந்த ஜூலியன் வெபர் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்,
Advertisement
நீரஜ் சோப்ரா தனது முதல் சுற்றில் நீரஜ் சோப்ரா 84..35மீ வீசிய நிலையில் வெபர் அசத்தலாக 91.51மீட்டர் வீசினார். அடுத்த 3 சுற்றுகளிலும் நீரஜ் foul throw வா வீசினார். தனது கடைசி சுற்றில் நீரஜ் 85.01மீட்டர் வீசி இரண்டாவது இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கத்தை உறுதி செய்தார். டிரினிடாட் மற்றும் டொபாகோ நாட்டை சேர்ந்த பிப் வால்காட்ர் வெண்கல பதக்கம் வென்றார்.
இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக டயமண்ட் லீக் இறுதிப் போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
Advertisement