தே.ஜ கூட்டணியில் ஓபிஎஸ் இருக்கிறார்: டிடிவி.தினகரன் தகவல்
ஸ்ரீவில்லிபுத்தூர்: தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் இருக்கின்றார் என, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்தார்.விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று அளித்த பேட்டி: தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் இருக்கின்றார். அவர் இருப்பது வெற்றிக்கு உதவி. எங்களுடன் ஓ.பன்னீர்செல்வம் தொடர்பில் உள்ளார். பாஜ தலைவர்கள், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கூட்டணி கட்சியினரை பலப்படுத்தி வருகின்றனர். டிசம்பர் மாத இறுதிக்குள் கூட்டணி கட்சிகள் நிலைமை சரியாகிவிடும்.
இதற்காக அமித்ஷா கடுமையாக உழைத்து வருகிறார். தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெற்று யாரை முதல்வராக அறிவிக்கின்றார்களோ அவர்களை நாங்கள் ஏற்றுக் கொள்வோம்.2026ம் ஆண்டு தமிழ்நாட்டிற்கான தேர்தலில் அமமுக முத்திரையை பதிக்கும். தேர்தலில் நான்குமுனை போட்டி ஏற்படும். நாங்கள் போட்டியிடும் தொகுதிகளை கேட்டு பெறுவோம். வரும் ஜனவரி மாதத்திற்குள் தேஜ கூட்டணியில் உள்ள குளறுபடிகள் பேசி சரி செய்யப்படும். இவ்வாறு தெரிவித்தார்.