நடிகர் ரஜினிகாந்துடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
Advertisement
சென்னை: நடிகர் ரஜினிகாந்தை பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் திடீரென சந்தித்துப் பேசினார். நடிகர் ரஜினிகாந்த் திரையுலகில் அடியெடுத்து வைத்து 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினிகாந்தை பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று சந்தித்தார். ரஜினியின் 50 ஆண்டுகால திரைப்பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்து அவருக்கு நினைவுப் பரிசு வழங்கினார். அரசியல் சூழல் குறித்தும் அவரிடம் நயினார் நாகேந்திரன் பேசியதாக கூறப்படுகிறது.
Advertisement