கடற்படையில் இலவச பி.டெக்., படிப்புடன் வேலை
பணி: பெர்மனென்ட் கமிஷன்டு ஆபீசர்ஸ் (எக்சிக்யூட்டிவ் மற்றும் டெக்னிக்கல் பிராஞ்ச்).
மொத்த இடங்கள்: 44. (இதில் பெண்களுக்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.)
வயது: 02.07.2006 க்கும் 01.01.2009க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்திருக்க வேண்டும்.
தகுதி: இயற்பியல், வேதியியல், கணித பாடங்கள் அடங்கிய பிரிவில் பிளஸ் 2 படித்து குறைந்தது 70% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஜேஇஇ-2025 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஜேஇஇ மெயின் தேர்வு-2025 தேர்வில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். பெங்களூரு, விசாகப்பட்டினம், கொல்கத்தா, போபால் ஆகிய மையங்களில் நேர்முகத் தேர்வு நடைபெறும்.
தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் இந்திய கடற்படையால் வழங்கப்படும் இலவச பி.டெக்., படிப்பில் சேர்த்துக் கொள்ளப்படுவர். இப் படிப்பு 4 ஆண்டு கால அளவினைக் கொண்டது. பி.டெக்., படிப்பில் அப்ளைடு எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், கம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ் ஆகிய பிரிவுகளில் ஏதாவதொரு பொறியியல் பிரிவை தேர்வு செய்து படிக்கலாம்.இந்தப் படிப்புக்கான அனைத்து செலவுகளும் இந்திய கடற்படையால் வழங்கப்படும். படிப்பை வெற்றிகரமாக முடிப்பவர்கள், இந்திய கடற்படையில் அதிகாரியாக பணியமர்த்தப்படுவார்கள். நேர்முகத் தேர்வில் கலந்து கொள்பவர்களுக்கு ஏசி ரயில் கட்டணம் வழங்கப்படும்.கேரளா, எழிமலாவிலுள்ள இந்திய கடற்படை கல்லூரியில் 2026ம் ஆண்டு ஜனவரியில் பி.டெக்., படிப்புக்கான வகுப்புகள் தொடங்கும்.www.joinindiannavy.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.07.2025.