கடற்படை ஹெலிகாப்டர்கள் பராமரிப்பு அமெரிக்காவுடன் இந்தியா ஒப்பந்தம்
புதுடெல்லி: இந்திய கடற்படையின் 24 சீஹாக் ஹெலிகாப்டர்கள் கொண்ட படைக்கு 5 ஆண்டு பராமரிப்பு பணிக்காக அமெரிக்காவுடன் ரூ.7,995 கோடி ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது. அமெரிக்காவின் லாக்ஹீட் மார்ட்டின் கார்ப்பரேஷனால் தயாரிக்கப்பட்ட எம்எச்-60ஆர் வகை ஹெலிகாப்டரில் அதிநவீன ஏவியோனிக்ஸ் மற்றும் சென்சார்களுடன் பல உள்ளன.
Advertisement
இவை அனைத்துவகை வானிலையிலும் பயணம் செய்யும். கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரியில் 24 ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. 2021ல் 3 ஹெலிகாப்டர்கள் வழங்கப்பட்டன. தற்போது பராமரிப்பு பணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
Advertisement