நவராத்திரி கண்காட்சி
சென்னை: தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: 2025ம் ஆண்டு நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு சென்னை, நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் நவராத்திரி மதி விற்பனை கண்காட்சி இன்று (12ம் தேதி) துவங்குகிறது.
Advertisement
இன்று (12ம் தேதி) முதல் அக்டோபர் 5ம் தேதி வரை நடைபெறும் நவராத்திரி விற்பனை கண்காட்சியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கம், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் ஆகியவற்றின் வழிகாட்டுதலில் செயல்படும் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களான நவராத்திரி கொலு பொம்மைகள், பட்டு, பருத்தி ஆடைகள் ஆகியவற்றை விற்பனை செய்திடும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
Advertisement