நவராத்திரி விழா மேடையில் பரபரப்பு; ஹலோ... உங்கள் ஷூவை கழற்றுங்கள்... நடிகை கஜோல் ஆவேசம்
Advertisement
அவர்களின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இந்நிலையில், துர்கா பூஜையின் போது, துர்கா தேவியின் சிலைக்கு அருகில் நின்று கொண்டிருந்த நடிகை கஜோல் திடீரென உணர்ச்சி வசப்பட்டு கூச்சலிட்டார்.
அந்த வீடியோவில், செருப்பு அணிந்து கொண்டு துர்கா பந்தலுக்கு வந்த நபரிடம் கஜோல் கடிந்து கொண்டார். மேலும் ‘ஹலோ... ஹலோ... உங்கள் ஷூவை கழற்றுங்கள்... கொஞ்சம் ஒழுக்கமாக நடந்து கொள்ளுங்கள்; இவ்விடம் பூஜைகள் நடக்கும் இடம்’ என்று கோபமாக கூறுகிறார். இந்த வீடியோ தற்ேபாது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Advertisement