நவராத்திரி பண்டிகை தொடங்கியதை அடுத்து தோவாளை சந்தையில் பூக்கள் விலை உயர்வு!!
கன்னியாகுமரி: நவராத்திரி பண்டிகை தொடங்கியதை அடுத்து தோவாளை சந்தையில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. வாடாமல்லி, கேந்தி, செவ்வந்தி, தாமரை, அரளி, தாழம்பூ என அனைத்து வகை பூக்கள் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.100க்கு விற்கப்பட்ட அரளி பூ ரூ.160ஆகவும், ரூ.50க்கு விற்கப்பட்ட வாடாமல்லி ரூ.80க்கும் விற்பனையாகிறது. ரூ.30க்கு விற்கப்பட்ட சிவப்பு கேந்தி ரூ.60ஆகவும், ரூ.70க்கு விற்ற சம்பங்கி ரூ.100ஆகவும் விலை உயர்ந்துள்ளது. ரூ.100க்கு விற்ற பட்டன் ரோஸ் ரூ.180க்கும், துளசி ரூ.20ல் இருந்து ரூ.30ஆகவும், ஒரு கிலோ பிச்சிப்பூ ரூ.400ல் இருந்து ரூ.600, மல்லிகை ரூ.500ல் இருந்து ரூ.800 ஆகவும் விலை உயர்ந்து விற்கப்படுகிறது.
Advertisement
Advertisement