நவராத்திரியை ஒட்டி போபாலில் இறைச்சி, மீன், முட்டை விற்கத் தடை!
போப்பால்: மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நவராத்திரி பண்டிகையை ஒட்டி அக்டோபர் 2ம் தேதி வரை இறைச்சி, மீன், முட்டை விற்கத் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஹரியானா மாநிலம் குருகிராமிலும் இதே போன்ற தடையை விதிக்க வேண்டும் என அப்பகுதியின் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் காவல்துறையில் மனு அளித்துள்ளனர்.
Advertisement
Advertisement