நவோதயா பள்ளி பணியிடங்களுக்கு டிசம்பர் 4 வரை விண்ணப்பிக்கலாம்
சென்னை: நவோதயா பள்ளிகளில் காலியாகவுள்ள ஆசிரியர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்ப பதிவு தொடங்கப்பட்டுள்ளது. kvsangathan.nic.in மற்றும் cbse.nic.in வலைதளங்கள் மூலமாக டிசம்பர் 4 வரை விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு ஜனவரி, பிப்ரவரியில் கணினி வழியில் நடத்தப்படவுள்ளது. தேர்வுக்கான ஹால்டிக்கெட் டிசம்பரில் வெளியிடப்படும். நடப்பாண்டு புதிதாக 57 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் அமைக்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement