இயற்கை அழகு!
கெரட்டின் என்பது நம் முடி, நகம், தோல் ஆகியவற்றில் இயற்கையாகவே உள்ள ஒரு புரதம். அது வலிமையும் மென்மையும் தருகிறது. ஆனால் அதிகமாக ஹீட், கெமிக்கல் ட்ரீட்மென்ட், மாசு போன்ற காரணங்களால் முடியில் உள்ள கெரட்டின் குறைந்துவிடுகிறது. இதனால் முடி உலர்ந்து, சுருண்டு, முறியும் நிலை ஏற்படும். இதை சரி செய்ய பலர் சலூன்களில் கெரட்டின் ட்ரீட்மென்ட் செய்து கொள்கிறார்கள். ஆனால் அதில் கெமிக்கல் கலந்திருக்கும். அதற்கு பதிலாக வீட்டிலேயே இயற்கையான கெரட்டின் சிகிச்சை செய்யலாம். முடி வலிமை பெறுவதற்கு புரதம் நிறைந்த உணவுகள் முக்கியம். முட்டை, பருப்பு வகைகள், நட்டுகள், பால், பனீர், மீன் போன்றவை உடலுக்குள் கெரட்டின் உற்பத்தியை அதிகரிக்க உதவும். அடுத்ததாக இயற்கையான ஹேர் மாஸ்க் தயாரித்து முடியில் தடவலாம். முட்டை மஞ்சள் கரு, தயிர், அவகாடோ, தேன், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை சேர்த்து பேஸ்ட் செய்து முடியில் தடவி ஒரு மணி நேரம் வைத்தால், அது இயற்கை கெரட்டின் சிகிச்சையைப் போலவே வேலை செய்யும். ஆலோவேரா ஜெல், வெந்தயம், சோயா பால், பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றிலும் கெரட்டின் உருவாக்க உதவும் சத்துகள் உள்ளன. இவற்றை அடிக்கடி பயன்படுத்துவதும், சத்தான உணவுகளை உட்கொள்வதும், ஹீட் ஸ்டைலிங்கை குறைப்பதும் இயற்கையாகவே முடியை ஆரோக்கியமாகவும் மென்மையாகவும் வைத்திருக்கும். வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல், ஆயில் மசாஜ் கொடுக்கலாம். மேலும் நல்ல தூக்கம் தான் சருமம், முடி, நகம் என அனைத்திற்கும் மருந்து.