இயற்கை அழகு
* வறண்ட சருமம் உடையவர்கள் ஆட்டுப்பாலை முகத்தில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து கழுவ வேண்டும். முகம் மிருதுவாகும்.
* புருவங்களில் ஆமணக்கு எண்ணெயை அழுத்தி தேய்க்க வேண்டும். தினமும் இவ்வாறு செய்தால் புருவம் கறுத்து பளபளப்புடன் இருக்கும்.
* தேன், கிளிசரின், சிறுவெங்காயச் சாறு ஆகியவற்றை சமஅளவில் கலந்து உதடுகளில் தேய்த்தால், உதடுகளுக்கு சிவந்தநிறம் கிடைக்கும்.
* அரைக்கீரையின் சாறும் கேரட்டின் சாறும் கலந்து தினமும் கை மூட்டுகளில் தேய்த்தால் கறுப்புநிறம் மாறும்.
* கருமைநிறத்துடன் நீண்ட விரல்களை உடையவர்கள் ஆரஞ்சு மற்றும் இளஞ்சிவப்பு நிற நகப்பாலீஷ்கள் போட்டுக் கொள்வது அழகாக இருக்கும்.
* உரசி எடுத்த ஒரு டீஸ்பூன் சந்தனத்துடன் கொஞ்சம் பன்னீரும் இரண்டு சிட்டிகை படிகாரமும் சேர்த்து கழுத்து மற்றும் தோள் பகுதிகளில் தேய்த்து வந்தால் வேர்க்குரு நீங்கும்.
*கோழிமுட்டையின் வெள்ளைக் கருவையும், கிளிசரினையும் சம அளவில் கலந்து குதிகாலில் தேய்த்து வந்தால் பாத வெடிப்பைத்தடுக்கலாம்.
* வெள்ளரிக்காய்ச சாறில் பஞ்சை நனைத்து கரும்படை ஏற்பட்ட பகுதியில் பற்றுப்போட வேண்டும். தினம் இதைக் கடைப்பிடித்தால், தோல் இயற்கைத் தன்மையடையும்.
* தேங்காய் எண்ணெய், ஆமணக்கு எண்ணெய் இரண்டையும் சம அளவு கலந்து நன்றாக சூடாக்க வேண்டும். இதனை தலையில் தேய்த்துக் குளித்தால் வெகு விரைவில் அடர்த்தியாகவும், ஆரோக்கியமாகவும் முடி வளரும்.
* சிறிய அளவு பெருஞ்சீரகம், மிளகு சேர்த்து காய்ச்சிய தேங்காய் எண்ணெயைத்தேய்த்து குளித்தால் தலைக்கு நல்ல குளிர்ச்சி உண்டாகும். இது பேனையும் பொடுகையும்போக்கும்.
* நன்கு பழுத்த நான்கைந்து ப்ளம்ஸ் பழங்களை அரைத்துக் கூழாக்கி முகத்தில் தேய்க்க வேண்டும். 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகம் கழுவ வேண்டும். முகப் பொலிவும்,மென்மையும் பெறும்.
* கொதித்த நீரில் ஒரு கைப்பிடி கிருஷ்ண துளசி இலையையும், வேப்பிலையையும் போட்டு அதன் ஆவியை முகத்தில் பிடித்தால் முகப்பருவும், கரும்புள்ளியும் அகன்றுவிடும்.
* பளப்பளப்பற்ற உதடுகளில் நெல்லிக்காய் சாறைத் தொடர்ந்து தேய்த்தால் உதடு சிவப்பு நிறம் பெறும்.
* நீண்ட கழுத்தை உடைய பெண்கள் நீண்ட தொங்கலான செயின்களை அணிவதை விட, கழுத்தை ஒட்டிய நெக்லஸ்களை அணிவது அழகாக இருக்கும்.
- எல். நஞ்சன்.