தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நேட்டோ, ஜி7 நாடுகள் டிரம்ப் பேச்சை கேட்டு வரி விதித்தால் பதிலடி தரப்படும்; சீனா எச்சரிக்கை

பீஜிங்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைப்புக்கு செவி சாய்த்தால் எதிர் நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என ஜி7, நேட்டோ நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. ‘ரஷ்யாவிடம் அதிகமான கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது 50% முதல் 100% வரி விதிக்க வேண்டும். இதன் மூலம் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் பங்கு வகிப்பதில் சீனாவுக்கு அழுத்தம் தர முடியும்’ என அமெரிக்க அதிபர் டிரம்ப் ஜி7 மற்றும் நேட்டோ நாடுகளிடம் வலியுறுத்தி உள்ளார்.

Advertisement

இது குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் நேற்று அளித்த பேட்டியில், ‘‘உலகெங்கிலும் உள்ள நாடுகளுடனான சீனாவின் பொருளாதார மற்றும் எரிசக்தி ஒத்துழைப்பு சட்டப்பூர்வமானது, விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டது. உக்ரைன் போரை பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்க்க முடியும் என்பதே சீனாவின் மாறாத நிலைப்பாடு. ஆனால், சீனாவுக்கு எதிராக அமெரிக்கா விடுத்த அழைப்பு ஒருதலைப்பட்சமானது, வஞ்சிக்கக் கூடியது. இது அமெரிக்காவின் வழக்கமான பொருளாதார வற்புறுத்தல் நடவடிக்கை. இதற்கு செவி சாய்ப்பவர்கள் எதிர் நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்’’ என கூறி உள்ளார். பொருளாதார, வர்த்தக பிரச்னைகளை தீர்க்க 2வது நாளாக ஸ்பெயினில் சீனா, அமெரிக்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் சீனா இத்தகைய பதிலளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement