நாடு முழுவதும் உயிரிழந்த 2 கோடி பேரின் ஆதார் எண்கள் நீக்கம்: ஆதார் ஆணையம்
டெல்லி: நாட்டில் உயிரிழந்தோர் 2 கோடி பேரின் ஆதார் எண்கள் நீக்கப்பட்டதாக யுஐடிஏஐ எனும் ஆதார் ஆணையம் அறிவித்துள்ளது. இந்திய பதிவாளர் ஆணையரிடம் இருந்து உயிரிழந்தோர் தொடர்பான விவரங்கள் பெறப்பட்டு ஆதாரில் நீக்கம் செய்யப்பட்டு வருகிறது. மாநில, யூனியன் பிரதேச அரசுகள், பொதுவிநியோகத் திட்டம் உள்ளிட்டோரிடமிருந்து பெற்ற தகவல் அடிப்படையில் நீக்கம் செய்யப்படுகிறது. குடும்ப உறுப்பினர்களில் யாரேனும் இறந்தால் ஆதாருக்குத் தகவல் தெரிவிக்கும் வசதியும் தொடங்கப்பட்டுள்ளது. முறைகேட்டைத் தடுக்கும் வகையில், இறந்தவரின் ஆதார் எண் வேறு எவருக்கும் தரப்படாது. ஆதார் எண் தரவுகளை சீரமைக்கும் பணியின் ஒருபகுதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
Advertisement
Advertisement